விபத்தில் சிக்கியவரின் பணத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்:

0

விபத்தில் சிக்கியவரின் பணத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்:

மணப்பாறை காந்தி நகரைச் சேர்ந்தவர் பஜ்லூர் ரஹ்மான் (38). இவர் நேற்று திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.

இதில் படுகாயமடைந்த பஜ்லூர் ரஹ்மானை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரிடமிருந்த ரூ.30,000 பணத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பஜீலுர் ரகுமானின் உறவினர்களை வரவழைத்து ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணத்தை மீட்டு  நேர்மையுடன் ஒப்படைத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.