திருச்சி ஆயுதப்படை காவலர் சிலம்பத்தில் புதிய உலக சாதனை !

0
1

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப சிறப்பிக்கும் வண்ணம் மதுரை அவனியாபுரத்தில் சவுத் இந்தியன் சிலம்பம் அகடமி புதிய உலக சாதனை முயற்சி மேற்கொண்டது. அதில் திருச்சி ஆயுதப்படை காவலர் அரவிந்த் மற்றும் மதுரையை சேர்ந்த சிலம்ப ஆசான் ஜவகர் இருவரும் இணைந்து இரட்டை சிலம்பம் தொடர்ந்து எட்டு மணி நேரம் எட்டு நிமிடம் 8 நொடி சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தனர். சென்ற ஆண்டு இவர்கள் ஒற்றைக் கையில் சிலம்பம் வைத்து முப்பது மணி நேரம் 30 நிமிடம் 30 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த உலக சாதனை ஆனது ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டிராகன் ஜெட்லீ நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

மற்றும் இது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்க்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த உலக சாதனை நேற்று காலை 12 மணிக்கு தொடங்கி காலை 08:10 மணிக்கு நிறைவுபெற்றது. காவலர் அரவிந்த் தற்போது நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் திருச்சியில் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு எந்த வித கட்டணமும் இன்றி சிலம்பக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.