3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள் ; தனியார் மருத்துவமனைகளுடன் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று (ஜூலை 22) 76 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஆலோசனை நடத்தினார். அப்போது சுகாதாரப் பணி இணை இயக்குனர் லட்சுமி, துணை இயக்குனர் ராம் கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டது, இரண்டாவது அலையை எதிர்க் கொண்டதுபோல மூன்றாவது தடையையும் எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயாராக வேண்டும். திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனாவிற்கான போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது, மேலும் மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர் உஷார் படுத்ப்பட்டிருக்கின்றனர். அதேபோல தனியார் மருத்துவமனைகளும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

மேலும் கொரோனா விவரங்களை முழுமையாக மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும். கொரோனா தொடர்பான சிகிச்சை அளிக்க 76 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இது தொடர்பாக எந்தவித புகாருக்கும் இடமளிக்கக் கூடாது.

2

சேவை அடிப்படையில் பணியாற்றுவது முக்கியம், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு கனிவுடன் நடந்து சிகிச்சை செலவுகளை காப்பீடு மூலமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தனியார் மருத்துவமனைகள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அறிவுரை வழங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.