திருச்சியில் கமிஷன் கேட்ட ஊராட்சி செயலர் இடமாற்றம், தலைவர் மீது நடவடிக்கை!

0
1

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் காரைப் பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் ஒப்பந்தங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரரிடம் ஊராட்சித் தலைவரும் ஊராட்சி செயலாளரும் ஒப்பந்தத்திற்கான கமிஷன் தொகையை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றனர். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி காரைப் பட்டி ஊராட்சியில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்ட பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் ஊராட்சி தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 205 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் ஊராட்சி செயலர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.