புகையிலைப் பொருட்களை சிறுவர்களிடம் விற்றால் நடவடிக்கை ; திருச்சி மண்டல ஐஜி எச்சரிக்கை!

0
1

திருச்சியை உள்ளடக்கிய மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கவழக்கத்தை குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் பள்ளி கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு புகையிலைப் பொருட்கள் விற்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

2

மேலும் சிகரெட், புகையிலை, பான்மசாலா, குட்கா, பான்பராக் மற்றும் இதர போதைப் பொருட்கள் பொருட்களை 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்றால் நீதிபரிபாலன சட்டப்பிரிவின் படி பிணையில் வரமுடியாத படி வழக்கு பதியப்பட்டு 7 ஆண்டு சிறை அல்லது ஒரு லட்சம் அபராதம் செலுத்தும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

4

மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் தங்களது சங்கத்தைச் சேர்ந்த சிறு கடை மற்றும் சில்லறை கடை, பொட்டிக்கடை வியாபாரிகளிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்