திருச்சியில் நாளை (23/07/2021) குடிநீர் நிறுத்தப்பகுதிகள்:

0
1

திருச்சியில் நாளை (23/07/2021) குடிநீர் நிறுத்தப்பகுதிகள்:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும் கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் மின்வாரியத்தால்  மாதாந்திர பராமரிப்பு பணி 23.07.2021 அன்று காலை 9.00மணிமுதல் மாலை 4.00 மணிவரை மேற்கொள்ளப் படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர் , ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும் மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர், மற்றும் பிராட்டியூர் காவேரிநகர் ஆகிய பகுதிகளிலும் 23.07.2021 ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

24.07.2021 முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.