திருச்சி அரசு மருத்துவமனையில் நூதனமுறையில் பணம் பறித்தவர் கைது:

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் நூதனமுறையில் பணம் பறித்தவர் கைது:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளின் உறவினர் ராஜு என்பவரிடம்,  தன்னை ஊழியர் அறிமுகப்படுத்திக் கொண்டு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி ஒரு நபர் பணம் கேட்டுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த ராஜு போலீசாருக்கு தகவல் அளித்தார், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

2

விசாரணையில் அவர் கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தை  சேர்ந்த கார்த்திக் (37) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சையின்போது அன்றாட நிகழ்வுகளை கவனித்து வந்த இவர் நோயாளிகளின் உறவினர்களிடம் ஆய்வக ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டு நூதன முறையில் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் இவரைக் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.