திருச்சி பஞ்சப்பூரில் அமைய இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய டெண்டர் ரத்து !

0
1

திருச்சி மாநகர் பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர்களை சுத்தம் செய்வதற்காக பஞ்சப்பூர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 11.25 கோடி ரூபாயில் டெண்டர் கோரப்பட்டது.

2

இதன் மூலம் 7.5 மில்லியன் லிட்டர் அளவுக்கு சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பஞ்சப்பூர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அதே பகுதியில் அமைய இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வருவதை உறுதி செய்வதாக உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்