திருச்சியில் 23 டன் கடத்தல் நெல் மூட்டைகள்  பறிமுதல்:

0
1

திருச்சியில் 23 டன் கடத்தல் நெல் மூட்டைகள்  பறிமுதல்:

ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகள் கடத்தி வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

2

துறையூர் எரகுடி அருகே வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி  23 டன் நெல் மூட்டைகள் துறையூரில் உள்ள ரைஸ் மில்லுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

4

இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த டிரைவர் சரவணராஜா (வயது 31), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் ஹரிதாஸ் (34), கரூர் குளித்தலையை சேர்ந்த மற்றொரு புரோக்கரான அழகேசன் (36) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து லாரியை மடக்கிப் பிடித்த 23 டன் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்து எம்.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்