உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான திருச்சி புறநகர் அதிமுக ; பரஞ்சோதி பேச்சு!

0
1

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லைநகர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் பரஞ்சோதி கூறுகையில், விரைவில் தமிழ்நாட்டிற்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கூறினார்.

2

மேலும் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்