துப்பாக்கி தொழிற்சாலையில் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் விழா

0

துப்பாக்கி தொழிற்சாலையில் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் விழா

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு ஏஐ சி எல் எப் தொழிற்சங்கம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா இன்று (15/07/2021) நடந்தது.

காமராஜரின் 119 பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தன்னார்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஏஐசி எல் எப் தொழிற்சங்கம் சார்பில் காமராஜரின் 119வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. பின்னர் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்களுக்கு பழக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எ.அருள் சேவியர் தலைமை வகித்தார். தலைவர் ராஜு, பணிக் குழு உறுப்பினர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி கர்னல் கார்த்திகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 1100 நபர்களுக்கு மா, பலா, சப்போட்டா, நெல்லி, மாதுளை,கொய்யா உள்ளிட்ட பழக்கன்றுகளை வழங்கினார்.

இந்த விழாவில் ஏஐசி எல் எப் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.