திருச்சியில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ; உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை!

0

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் போலீசாரும் சளைக்காமல் தொடர்ந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், செல்வராஜ் மற்றும் ஏட்டு ராமலிங்கம், கோபால், எட்வின், கார்த்திக் ஆகியோர் கொண்ட குழு அதிரடியாக விசாரணை பணியை மேற்கொண்டது.

அப்போது ஐ.ஆர் 72 அரிசியுடன் கலப்படம் செய்யப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணபதியை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.