பள்ளிகள் திறப்பு ? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் கோயில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியது, புதுச்சேரி மாநிலத்தில் 16ஆம் தேதி முதல் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது. தமிழகத்திலும் கல்வி நிலையங்களால் திறப்பது குறித்து வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது, வல்லுனர்கள் அளிக்கும் பதிலை கொண்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் அரசுப் பள்ளியை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை தக்கவைக்கும் பொருட்டு கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் நடப்பாண்டில் நீட்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பயிற்சி வகுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி முதலே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 தனித்தேர்வு தற்போது நோய் பரவல் காரணமாக எப்போது நடத்துவது என்று குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.