திருச்சியில் தாய் குடிக்க பணம் தராததால் ; மகன் தற்கொலை நாடகம் !

0
1

திருச்சி மாவட்டம் வேலூர் அருகே உள்ள சண்முக நகர் பகுதியில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைக்கிறது. இதை அடுத்து காவல்துறையினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து கழுத்தறுபட்ட நிலையில் இருந்த நபரை திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

2

இந்த நிலையில் அது குறித்து விசாரித்த போது முதலில் குமார் தன்னை ஒருவர் அறுத்து விட்டு சென்றதாக போலீசாரிடம் கூறி இருக்கிறார், இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அக்கம்பக்கத்தினரை விசாரிக்கையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை மேலும் அந்த பகுதியில் ரத்தக் கறை படிந்த நிலையில் ப்ளேட் இருந்துள்ளது. அதை கைப்பற்றி மீண்டும் குமாரிடம் விசாரிக்கையில் எனது தாயிடம் குடிக்க பணம் கேட்டேன், அவர் தரவில்லை, அதனால் நாடகமாடி காசு வாங்கலாம் என்று எண்ணினேன். என்று கூறியிருக்கிறார். பிறகு அந்த இளைஞருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்