திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல்!

0

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே உள்ள எஸ்.ஐ.டி எதிரே உள்ள தெருவில் உள்ள மாவு அரவை மில்லில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டதில் அந்தப் பகுதியிலிருந்து அரவை மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீஸ் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பிச் சென்ற அரவை மில்லில் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சமீபகாலமாக திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.