ஜோசியம் பார்ப்பதாக கூறி நகை, பணம் கொள்ளை ; 2 பெண் ஜோதிடர்கள் கைது !

0
1

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாப்பாபட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி சிரங்காயி இவர் வீட்டில் இருந்த சமயத்தில் இரண்டு பெண்கள் வந்து, நாங்கள் கைரேகை சோதிடம் பார்ப்பவர்கள் என்றும், உங்கள் வீட்டில் பரிகாரம் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். பரிகாரத்தை நீக்க ஒரு பூஜை செய்ய வேண்டும் என்று கூறி பூஜை செய்ய ஒருவரை அனுப்பி வைக்கிறோம் என்று சிரங்காயி-யிடம் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்கள் அனுப்பி வைத்த நபர் கடந்த 8ஆம் தேதி மதியம் சிரங்காயி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூஜைக்காக 9,500 ரூபாய் பணத்தையும் தங்க நகையையும் கேட்டிருக்கிறார். பூஜை செய்வதற்காக கூறியதை அடுத்து சிரங்காயி நம்பி அவரிடம் பணத்தையும், 2.1/2 நகையையும் கொடுக்க, சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் அந்த மர்மநபர்.
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் தா.பேட்டை அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் இரண்டு பெண்கள் ஜோதிடம் பார்க்க வந்திருப்பதாக தகவல் கிடைக்க போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் இருவரும் தொட்டியம் அருகே உள்ள வடக்கு அரங்கு ஊரைச் சேர்ந்த சரசு மற்றும் பேபி என்பது தெரியவந்தது.

அவர்களே சிங்காரி வீட்டில் பணம் திருடியதும், அவர்களுக்கு உடந்தையாக அதே பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவர் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதை எடுத்து அந்த பெண் ஜோதிடர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அன்புவை போலீசார் தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.