மரணத்திலும் பிரியாத தம்பதிகள் !

0

திருச்சி மாவட்டம் பாலக்கரை கீழப்புதூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் (73) இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றியவர். வயது மூப்பின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால் வீட்டில் இருந்து வந்தார். அவரது மனைவி நாகம்மாள் (63) இவர் மகாலிங்கத்தை பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாலிங்கம் உயிரிழக்க, அவரது மனைவி நாகம்மாள் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அடுத்த நான்கு மணி நேரத்தில் நாகம்மாளும் இறந்துவிட்டார்கள்.
வாழும்போதும் இணைபிரியா தம்பதிகள் மரணத்தின் போதும் இணைந்தே சென்றிருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.