திருச்சி கோயில் கிணற்றில் காயங்களோடு சடலம் மீட்பு ; போலீஸ் விசாரணை !
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த தனபால் இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகர் அருகே உள்ள ஏ ஆர் கே நகர் அம்மன் கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆறு மாதங்களாக அன்னதான உணவுகளை சாப்பிட்டும் மக்கள் கொடுக்கும் பணங்களை வைத்துக்கொண்டும் கோவிலிலேயே தங்கி பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் கோயில் பூசாரி காகங்களுக்கு சோறு வைக்க பூஜை முடித்து விட்டு கோயில் கிணற்றருகே சென்று உள்ளார். அப்போது சடலம் ஒன்று கிடப்பதை பார்த்து கிராம நிர்வாக அலுவலருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கிணற்றில் கிடந்த சடலத்தை போலீஸார் மீட்டு பரிசோதனை செய்ததில் அவர் கோவிலை சுத்தம் செய்து வந்த தனபால் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தலையில் அடிப்பட்ட காயம் இருந்ததால் அவரை யாரேனும் தலையில் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.