திருச்சி அருகே ஓடும் பஸ்ஸில் டயர் கழன்று விழுந்ததால் தடுமாறிய பேருந்து ; சுதாரித்த டிரைவர்!

0

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து சென்று கொண்டிருக்க ஆண்டிபட்டி எனும் இடத்தில் பேருந்து முன் டயர் திடீரென்று கழன்று முன்னே சென்றது. இதைப்பார்த்து சுதாரித்த ட்ரைவர் பேருந்து நிலைதடுமாறியப் போது வேகத்தை கட்டுப்படுத்தி சாதுரியமாக பேருந்தை நிற்பாட்டினார். இதையடுத்து அச்சத்தில் இருந்த பயணிகளை சமாதானப்படுத்தி அந்த வழியாக வந்த மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.