திருச்சியில் அரிவாளை காட்டி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது:

0
1

திருச்சியில் அரிவாளை காட்டி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது:

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் மற்றும் இவரது நண்பர்கள் ஆலிவர், ஆதி, மதன்குமார் ஆகியோரை கணேசபுரம் புதுத்தெரு பகுதியில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து, 4 பேரையும் கடத்தி சென்றது.

2

இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்த பிரபு, சோனி, செந்தில்குமார் ஆகிய 3 பேர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

4

இதனையடுத்து 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம், பணம் மற்றும் அறிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய சூர்யா என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்