திருச்சியில் சொன்ன இடத்தில் பஸ் நிற்காததால் கண்ணாடியை உடைத்த இரண்டு நபர் கைது !

0
1

ஜூலை 7 இரவு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு இருக்கிறது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் பாலக்கரைக்கு டிக்கெட் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் பேருந்து பாலக்கரை நிறுத்தத்தில் நின்ற போது இறங்காமல் பாலம் அருகே இருங்குவதாக கண்டக்டரிடம் கூறியிருக்கின்றனர்.

ஆனால் கண்டக்டர் பேருந்து நிறுத்தத்தில் மட்டும்தான் நிற்கும் என்று கூறிவிட்டார். இதையடுத்து இரண்டு நபர்களும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு பஸ்ஸிலிருந்து இறங்கி பின்புற கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கண்டக்டர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நவாஸ், முகமது பகத் என்ற இருவரை கைது செய்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.