திருச்சி அருகே ஆற்று மணல் திருட்டு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை:

திருச்சி அருகே ஆற்று மணல் திருட்டு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளளூர் சத்திரம் பகுதியில் போலீசார் நேற்று (8/07/2021) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து 3 இருசக்கர வாகனங்களில் அனுமதியின்றி ஆற்று மணலை திருடி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.
