திருச்சியில் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 பேர் பலி

0
1

திருச்சியில் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தினசரி கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் நேற்று (7/07/2021)  புதிதாக 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,442 ஆக உயர்ந்துள்ளது.

2

திருச்சியில் நேற்று 25 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67,988 உள்ளது. நேற்று திருச்சி மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 934 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.