திருச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து சோறு சமைக்க முயன்ற சிறுவன் மீது தீப்பற்றி மரணம்!

0
1

திருச்சி இ.பி.ரோடு அருகே உள்ள கருவாட்டு பேட்டையை சேர்ந்த பாலமுருகன் மகன் ஸ்ரீராம். இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது நண்பர்களுடன் இணைந்து சோறு சமைத்து சாப்பிட முயற்சித்திருக்கிறார். அதற்காக சிறிய அளவிலான அடுப்பு, பாத்திரங்களை கொண்டு சமையல் வேலையை தொடங்கி இருக்கின்றனர்.
அப்போது அடுப்பிலீ தீ பிடிக்காததால் வீட்டிலிருந்த சனிடைசர் எடுத்துவந்து அடுப்பில் ஊற்றி தீயைப் பற்றவைத்துள்ளார். அப்போது தீ ஸ்ரீராம் சட்டையின் மீது பிடித்து எரியத் தொடங்கியிருக்கிறது.

இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.