திருச்சி துறையூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்

0

 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெண் அழைப்பதற்காக சென்ற வேன் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி மேலும் 14 பேர் படுகாயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள திருவரங்க பட்டி கிராமத்தில் நாளை பாலமுருகன் என்பவருக்கு நடக்கவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொட்டையூர் கருப்பம்பட்டி சேர்ந்த பானுப்பிரியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அது சமயம் மாப்பிள்ளை வீட்டார் பெண் அழைத்து வருவதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி வாகனங்களில் கருப்பம்பட்டி நோக்கி சென்றனர்.

அப்போது சேனப்பணல்லூர் என்ற இடத்தில் வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது ஆண்கள் வந்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் பெரியண்ணன் என்பவர் வாகன இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தகவலறிந்த துறையூர் காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனைக்கு தகவலறிந்து வந்த துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் திருச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் இதில் ஏழு நபர்களுக்கு உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.