தமிழக முதல்வர் 7 தேதி திருச்சி வருகை !

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்டமும் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த வகையில் ஏழாம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார்.
மேலும் அன்றைய தினம் கொரோனா தடுப்பு பணிகள், சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள், அரசு மருத்துவமனையில் ஆய்வு மற்றும் கருணாநிதி மணிமண்டபம் கட்டுமானப் பணி ஆய்வு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதை எடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை வாகனத்தில் செய்கிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி காவல் துறையினர் நேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.
