திருச்சியில் நேற்று நள்ளிரவு பெய்த மழையில் வீடுகளுக்கு சென்று கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு!

திருச்சி மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்தது. இவ்வாறு இரவு தொடர்ந்து பெய்த கனமழையினால் தெரணிபாளையம், நல்லூர், நம்புகுறிச்சி ஆகியகிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து இரவு நேரத்தில் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் ஆகியோர் தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.
மேலும் கலெக்டர் அதிகாரிகளிடம் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதோடு, ஆறு தூர்வாரி கொடுக்கப்படும் என்று அந்தப் பகுதி மக்களுக்கு உறுதியளித்தார்.
