முகாந்திரம் இல்லாத புகாரில் பிஷப் ஹீபர் கல்லூரி துறைத் தலைவர் மீது நடவடிக்கை ; ஜான் ராஜ் குமார் அறிக்கை !

0

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் என்பவர் மீது முதுகலை முதலாமாண்டு மாணவிகள் புகார் அளித்திருந்தனர். புகாரில் ஆபாசமாக பேசுவதாகவும், ஆபாசமாக சைகை காட்டுவதாகவும், மற்றும் பல குற்றச்சாட்டுகளை துறைத் தலைவர் மீது கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகாராக தெரிவித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டதில் துறைத் தலைவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் துறைத்தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் துறைத் தலைவர் பால் சந்திரமோகனுக்கு ஆதரவாக திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக ஆர்வலர், ஜான் ராஜ் குமார்

இந்த அறிக்கையில், திருச்சி – புத்தூரில் உள்ள பிஷப் சபர் கல்லூரி தமிழ் துறைத்தலைவர் பேராசிரியர் பால் சந்திர மோகன் மீது பொய்யான புகார் அளித்து நடவடிக்கை என்ற பெயரில் பதவி நீக்கம் செய்தது கண்டனத்திற்குறியதாகும்.
மாணவியர்கள் அளித்த புகாரில் எந்த விதமான பாலியல் குற்றம் சம்பந்தமான முகாந்தரம் இல்லை, சுமார் 30 ஆண்டுகளாக சிறப்பாக தனது ஆசிரியர் பணி செய்து வரும் பால் சந்திரமோகன் மீது காழ்ப்புணர்சியுடன் , பழிதீர்க்கும் நோக்குடன் எடுக்கப்பட்ட முயற்சி தான் இந்த நடவடிக்கைகள். எந்தவிதமான ஆதாரங்களோ , ஆவணங்களோ இல்லாமல் ஒரு நபர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை புணைந்து உருவாக்கப்பட்ட ஐவர் அணியின் சதி திட்டம் தான் இதற்கு காரணம்.

எனவே கல்லூரி முதல்வரும் ஆட்சி மன்ற குழு தலைவர் பேராயர் அவர்களது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பேராசிரியர் பால் சந்திரமோகன் அவர்களுக்கு பணி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.