லால்குடியில் புதிய ஒருங்கிணைந்த கோர்ட் ; நிலத்தை கையகப்படுத்தி பணியை தொடங்க நீதிபதி உத்தரவு !

0
1

திருச்சி மாவட்டம் லால்குடி கோர்ட் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இவ்வாறு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் லால்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுவிடம் புதிய நீதிமன்றம் கட்டித்தர கோரி மனு அளிக்கப்பட்டது. இதை அடுத்து லால்குடி அருகே உள்ள மாந்துறை பகுதியில் உள்ள குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு தகவல் தருமாறு வக்கீல்கள் சங்கத்திற்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

2

ஆனால் அந்த நிலத்தை கையகப்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி கிளாட் தாகூர், தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி, லால்குடி சார்பு நீதிபதி பால்பாண்டியன், உரிமையியல் நீதிபதி மோகனப்பிரியா, குற்றவியல் நீதிபதி விஜய பாரதி ஆகியோர் புதிய கோர்ட் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தனர்.

4

இந்த நிலையில் புதிய ஒருங்கிணைந்த கோர்டை கட்டுவதற்கான தகுதியான இடம் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே அந்த இடத்தை கையகப்படுத்தி பணிகளை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வக்கீல்கள் சங்க நிர்வாகிகளிடம் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தினார்.

இதில் லால்குடி வக்கீல் சங்க தலைவர் கென்னடி, இணைச் செயலாளர் முத்து, வக்கீல்கள் திருஞானசம்பந்தம் ,ஜெயக்குமார் ,கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்