திருச்சி அருகே சுங்கச்சாவடி கட்டணம் கட்டாததால் அரசு பஸ் நிறுத்தம் ; பயணிகள் அவதி!

0

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி – திண்டுக்கல் பைபாஸ் பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடியில் பஸ் கடக்க முயன்றபோது பஸ் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி சுங்கச்சாவடி ஊழியர்கள் பஸ்சை நிறுத்தினர்.

அரசு பஸ்கள் சுங்கச்சாவடிக்கு மாத கட்டணம் செலுத்தியும், பாஸ்டர் மூலமாக பணம் செலுத்தியும் சென்று வந்தன ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சில பேருந்துகள் இன்னும் கட்டணம் செலுத்தாமல் உள்ளன. அதனால் பஸ் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறி சுங்கச் சாவடியை கடந்து செல்ல பஸ்ஸிற்கு அனுமதியை மறுத்தனர்.

பிறகு அந்த வழியாக வந்த மாற்று பேருந்தில் பயணிகள் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.