மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்க்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

0
1

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்க்கான
தொழில் முனைவோர் மாதிரி திட்டம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

Helios

தமிழகத்தில் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம்
மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம
மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின
வளர்ப்பினருக்கான தொழில்முனைவோர் மாதிரி” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப் பொறுப்பு
குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில்
முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

2

இத்திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில
அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச
வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30
விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட
மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருச்சி மாவட்ட மீன்வள உதவி
இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். எண்.4, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம், திருச்சி 620 020, தொலைபேசி எண்.0431 – 2421173

இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.07.2021 ஆகும். மேலும் இதற்குரிய விண்ணபங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

இத்தகவலை மாட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.