திருச்சி அருகே ஜமாபந்தியில் பெறப்பட்ட 75 மனுக்களுக்கு தீர்வு:

0
1

திருச்சி அருகே ஜமாபந்தியில் பெறப்பட்ட 75 மனுக்களுக்கு தீர்வு:

திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில்
பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு 75 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்
சு.சிவராசு நேற்று(30.06.2021) வழங்கினார்.

ஜமாபந்தி நிகழ்ச்சியினையொட்டி ஆன்லைன்னில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

2

இதில், 13 நபர்களுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையும், 14 நபர்களுக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும், 20 நபர்களுக்கு உட்பிரிவு
அல்லாத பட்டா மாற்றமும், 19 நபர்களுக்கு நத்தம் பட்டா மாற்றமும்,
01 நபருக்கு வாரிசு சான்றும் 06 நபர்களுக்கு சிறுகுறு விவசாயி
சான்றும் என மொத்தம் 75 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முசிறி வட்டாட்சியர் சந்திரதேவநாதன்,அலுவலக மேலாளர் சிவசுப்ரமணியம் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.