வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் ரூ.1 கோடி வரை மோசடி

0
1

வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் ரூ.1 கோடி வரை மோசடி:

சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவருக்கு நண்பர் மூலம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சத்திய நாராயணன் என்பவர் அறிமுகமானார்.

2

அப்போது சத்தியநாராயணன் அதிமுக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்று கூறி கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக சம்பூரணத்திடம் ரூ.7 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து 20 லட்சம் என சுமார் ஒரு கோடி வரை பணம் பெற்றுள்ளார்.

4

இந்நிலையில் நீண்ட நாள் ஆகியும் வேலை வாங்கி தராததால் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு சென்று விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதுவரை பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தரவும் இல்லை பணத்தை திருப்பி கேட்டால் செல்வாக்கை வைத்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்