திருச்சி அரசு மருத்துவமனைகளில் குடும்பநல நிகழ்ச்சி ; கலெக்டர் தகவல்!

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய மக்கள் தொகை 139 கோடியாகவும், தமிழக மக்கள் தொகை 8.25 கோடியாகவும், திருச்சி மாவட்ட மக்கள் தொகை சுமார் 30 லட்சமாகவும் உள்ளது.
இவ்வாறு அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இளம் வயது திருமணம், குழந்தைகளுக்கு இடையே போதிய இடைவெளி, குழந்தை நலத்திட்டத்தில் ஆண் பங்களிப்பு, கருக்கலைப்பு, இப்படித்தான் குடும்ப நடைமுறைகளை பற்றிய தகவல்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஜூன் 27ஆம் தேதி தொடங்கிய பொது நல விழிப்புணர்வு கண்காட்சி ஜூலை 24ம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
