இணைய வழியாக வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய திருச்சி கலெக்டர் வேண்டுகோள்!

0
1

இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்கள் நடத்தி ஒவ்வொரு வாக்காளர் அடையாள அட்டையும் அவரது தொலைபேசி எண்னோடு இணைக்கப்பட்டு இணையதளம் மற்றும் செல்போன் மூலமாக எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள, நவீன முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி புதிதாக சேர்ந்துள்ள வாக்காளர்கள், பெயர் போன்ற திருத்தங்கள் செய்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்த வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சமிபத்தில் முடிந்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலின் போது பெருமளவில் இணைய வழியாக பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதிலும் தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது குறைவாகவே உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கூறியுள்ளது, சிறப்பு சுருக்கமுறை திருத்ததில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் இனிய முகவரிக்கான www.nsvp.in மற்றும் voter helpline mobile app மூலம் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து தமிழகத்திற்கும், திருச்சி மாவட்டத்திற்கும் நற்பெயரை ஈட்டித் தர ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.