திருச்சி அருகே அரசு பள்ளி குடோனில் தீ விபத்து:

0
1

திருச்சி அருகே அரசு பள்ளி குடோனில் தீ விபத்து:

திருச்சி அருகே முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள முசிறி கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்கான இலவச பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இங்கிருந்து பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று (29.06.2021) புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடந்தாண்டு வழங்கியது போக எஞ்சியிருந்த புத்தகப் பைகள் எரிந்து சாம்பலானது.

2

தகவலின்படி உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால் அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவகளுக்கு வழங்க வைத்திருந்த பாடபுத்தகங்கள் தீ விபத்தில் தப்பியது.

3

Leave A Reply

Your email address will not be published.