கோவிட் சென்டருக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கிய அசிஸ்ட் !

0

அசிஸ்ட் சலேசிய சகோதரிகள் நிறுவனம் சார்பில் இனாம்ககுளத்தூரில் அமைந்துள்ள கோவிட் கேர் சென்டருக்கு 13 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அசிஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஆரோக்கிய மேரி, புஷ்ப ஜெயா, களிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் மற்றும் அஸ்சிட் நிறுவனத்தின் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் அஸ்சிட் நிறுவனத்தின் மாலை பள்ளி மாணவர்கள் மற்றும் அம்பேத்கர் குழந்தைகள் பாராளுமன்ற மாணவ, மாணவிகள் தாங்கள் சேமித்த தொகை 1500 ரூபாயை சட்ட மன்ற உறுப்பினர் பழனியாண்டியிடம் முதல்வரின் நிவாரண நிதி உதவிக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு நன்கொடை அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.