திருச்சியில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்; வாகனச் சோதனையின் போது சிக்கியது!

0

திருச்சி மாநகர பகுதிகளில் தற்போது ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்திருப்பதாக உணவு கடத்தல் பிரிவுக்கு புகார் வந்தவண்ணம் இருந்தது. இதை அடுத்து கடந்த வாரங்களில் பல்வேறு அரிசி ஆலைகளில், ரைஸ்மில் களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து வரகனேரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்று போலீசாரை பார்த்தவுடன் தப்ப முயன்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து எஸ் ஐ முத்துக்குமரன் வாகனத்தை பிடித்துள்ளார். ஆனால் டிரைவர் தப்பித்து ஓடி விட்டான்.

பிறகு வாகனத்தை ஆய்வு செய்யும் போது வாகனத்தில் 897 கிலோ எடையுள்ள 16 மூட்டை ரேஷன் அரிசி, 175 கிலோ எடையுள்ள 4 முட்டை கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.