ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!

0
1

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று காலை 8.00 மணிக்கு கோயில் வளாகம் ஸ்ரீ ரெங்க விலாச மண்டபத்தில் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்று பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணி நிதி ரூ 4000/- ம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களை வழங்கினார்.

2

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ,மாவட்ட ஆட்சிதலைவர் சிவராசு , ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, மண்டல இணை ஆனையர் சுதர்சனம் , சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி , திருவானனக் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், அரசு அதிகாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.