தனியார் பள்ளியில் இலவச கல்வி ; 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் ; கலெக்டர் தகவல்!

0

தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பு எல்கேஜி / ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எவ்வித கட்டணமும் இல்லாமல் 25 சதவீதம் நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 1 (சி) படியும், தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2011ன் விதி 8 மற்றும் 9-ம் படியும் அனைத்து தனியார் (சிறுபான்மையற்ற) சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பு எல் கே ஜி / ஒன்றாம் வகுப்பு சேர 25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சேரும் மாணவர்களுக்கு எவ்வித கல்விக் கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.rte.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மாணவர்கள் சேரும் பள்ளி வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம் போன்ற அனைத்து கல்வி அலுவலகங்களிலும் இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் நோட்டீஸ் போர்டில் அதற்கான விவரங்களை வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
மேலும் இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அனைத்து கல்வி நிலைய வளாகங்களில் அது குறித்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.