திருச்சி ரைஸ்மில்லில் இருந்து மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல் !
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வரகனேரி பகுதியிலுள்ள நேஷனல் பிளவர் மில்லில் ரேஷன் அரிசி அரைக்க படுவதாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு எஸ்ஐ கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைக்க, இதையடுத்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரைஸ்மில்லில் ஆய்வு செய்தபோது, 150 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அரிசி மூட்டை ஏற்றி வந்த அக்கீம், குலேந்திரன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரைஸ்மில்லில் உரிமையாளர் அப்துல் ஜாபரை தேடி வருகின்றனர்.