திருச்சி முகாம் சிறையில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு: 

0
1

திருச்சி முகாம் சிறையில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு: 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள், சிங்களர்கள், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 107 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

2

இவர்கள் போலி பாஸ்போர்ட், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து மீண்டும் நாடு திரும்ப முடியாமல் போலி முகவரியில் வசித்தவர்கள் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

4

இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த இலங்கை தமிழரான முகமது அலி என்பவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் 2020-ல் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இவர் திருச்சி அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்