விபத்தினை தவிர்க்க சமயபுரம் அருகே ரூ. 2 கோடி செலவில் சிறுபாலம்: 

0
1

விபத்தினை தவிர்க்க சமயபுரம் அருகே ரூ. 2 கோடி செலவில் சிறுபாலம்: 

திருச்சி கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் 346 சிறிய பாலங்கள், 36 பெரிய பாலங்கள் உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல இடங்களில் சிறு பாலங்கள் கட்டும் பணி தொடங்கபட்டுள்ளது.

2

இந்நிலையில் புள்ளம்பாடி வாய்க்காலில் குறுக்கே ரூ. 2 கோடி செலவில் சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மூன்று மாதத்திற்குள் முடிக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்துள்ளனர்.

4

இந்த பாலப் பணி முடிவுக்கு வந்தபின் சென்னை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றியும், குறிப்பாக விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்