சட்டமன்ற கன்னிப் பேச்சு ; திரும்பி பார்க்க வைத்த இனிகோ இருதயராஜ் !

0
1

திருச்சி கிழக்கு வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் நேற்று (ஜூன் 23) திருச்சி சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்தார்.

இவ்வாறு இனிகோ இருதயராஜ் சட்டமன்ற கன்னிப் பேச்சு திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக ஆக்கவேண்டும். மெட்ரோ ரயில் சேவையை திருச்சிக்கு கொண்டு வரவேண்டும். புதிதாக அமைய இருக்கிற ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு, கலைஞர் பெயரை சூட்ட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்தார்.

2

வேலை வாய்ப்பு : திருச்சியில் உள்ள இளைஞர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் திருச்சியில் உருவாக்கித் தர வேண்டும். இரண்டாவது தலைநகரம் தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எளிதாக வந்து செல்லக் கூடிய வகையில் சாலை , ரயில் , விமான போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சியை தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்.


காந்தி மார்க்கெட் : காந்தி மார்க்கெட் எந்த சூழ்நிலையிலும் மாற்றப்படாமல், அருகிலுள்ள பெண்கள் சிறைச்சாலை அகற்றப்பட்டு காந்தி மார்க்கெட் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.மேலும் நவீன குளிர்பதன கிடங்கு அமைத்துத் தரவேண்டும்.

திருச்சிக்கு மெட்ரோ ரயில் : திருச்சி மாநகரில் போக்குவரத்து வசதிகளை எளிமையாக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: திருச்சியின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்க வேண்டும். அப்பேருந்து நிலையத்திற்கு ஆனால் முதல்வர் கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டம் : திருச்சியில் பழமையான பாதாள சாக்கடைகள் உடைந்து கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையை மாற்றும் வகையில் புதிதாக பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உய்யகொண்டான் கால்வாய் தூர்வாருதல் திருச்சியின் தேம்ஸ் என்றழைக்கப்படும் உய்யகொண்டான் கால்வாயில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு மாசற்ற கால்வாயாக மாற்ற வேண்டும்.

குளங்கள் தூர்வாருதல் : 228 ஏக்கர் பரப்பளவுள்ள சாத்தனூர் பெரியகுளம் தூர்வாரப்பட வேண்டும். ஏக்கர் பரப்பளவுள்ள செங்குளம் தூர்வாரப்பட வேண்டும். 24.45 ஏக்கர் பரப்பளவுள்ள கனக்கான்குளம் தூர்வாரப்பட வேண்டும். வடுகப்பட்டி குளம் – 7.30 ஏக்கர் பரப்பளவுள்ள தூர்வாரப்பட வேண்டும்.

நவீன சுரங்க நடைபாதை மேம்பாலம் : சிந்தாமணி அண்ணாசிலை அருகே நவீன சுரங்க நடைபாதை அமைத்து தர வேண்டும். சிதம்பரம் மஹால் அருகேயுள்ள குறுகிய பாலத்தை மாற்றி விரிவுபடுத்தி புதிதாக கட்டித் தர வேண்டும். கலைஞர் நகரில் இருந்து ஓலையூர் செல்லும் வழியிலுள்ள உடையான்பட்டி ரயில்வே கேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.

வரகனேரி மருத்துவமனை : வரகனேரி நகர்ப்புற மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு போதுமான மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
குடிநீர் வசதி கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தில் பில்டர், ஏரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பட்டா வசதி : பட்டா இல்லாமல் பல்வேறு பகுதிகளில் வாழக்கூடிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . தாராநல்லூர், கல்மந்தை காலனி மக்களுக்கு அரசு உறுதியளித்தபடி குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.

தெரு விளக்குகள் சரியாக எரியாத எல்.இ.டி தெரு விளக்குகள் மாற்றப்பட்டு புதிதாக அமைத்துத் தர வேண்டும்.
சிவாஜி சிலை திறப்பு : கட்டி முடிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் திறக்கப்படாமல் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஜாதிப் பெயர்கள் : தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுபான்மையினர் நலன் : மாவட்டந்தோறும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். கல்லறைத் தோட்டம் நகரப் பகுதியில் 5 ஏக்கர் , கிராம பகுதியில் 2 ஏக்கர் நிலம் கல்லறை தோட்டத்திற்காக ஒத்துக்கித்தர வேண்டும்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிதாக அரசு உதவி பெறும் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் மடிக்கணினி, புத்தகங்கள் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தலித் கிறிஸ்துவர்கள் மத அடிப்படையில் அல்லாமல் ஜாதி அடிப்படையில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சலுகைகள் மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை வேண்டும்.

 

கலைஞருக்கு பாரத ரத்னா விருது : முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை தமிழர் நலன் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் நிலவும் பிரச்சனைகள் சரிசெய்யப்பட வேண்டும். 14 நாட்களாக சிறையில் போராடி வரும் அகதிகளின் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.
என்று பல்வேறு தீர்மானங்களை சட்டப்பேரவையில் முன்மொழிந்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.