திருச்சி 2வது தலைநகர் ; சட்டமன்றத்தில் திருச்சி எம்எல்ஏ பேச்சு!

0
1

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 16 ஆவது கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. (ஜூன் 23) இன்றைய கூட்டத்தொடரில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்து உள்ளார்.

இவ்வாறு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்.

மேலும் திருச்சியில் புதிதாக அமைய இருக்கின்ற ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும்.

2

அதோடு மெட்ரோ ரயில் சேவையை திட்டத்தை திருச்சியில் கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற 4 தீர்மானங்களை இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேசி உள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.