திருச்சியில் மின் தடைக்கு குட்பை ; துரிதகதியில் பணிகள் மின்வாரிய அதிகாரி தகவல்!

0
1

திருச்சி மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் தற்போது ஏற்படும் அதிக மின் தடைகளை போர்க்கால அடிப்படையில் 10 நாட்களுக்கள் சரி செய்யும் பொருட்டு கடந்த 19 ம் தேதியிலிருந்து ஜூன் 28 ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழு கோட்டங்களில் உள்ள 52 மின் நிலையங்களில் உள்ள 96 மின்னோட்ட பாதைகள் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை 500க்கும் மேற்பட்ட மின்சாரவாரிய பணியாளர்களை கொண்டு பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்போது முன்னறிவிப்புடன் மின்நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

2

இப்படி மேற்கொள்ளப்படும் பணிகளில் மரங்களால் ஏற்படும் தடைகள் அகற்றப்பட்டும், 26 இடங்களில் இருந்த பழுதடைந்த மின் கம்பம் இணைப்புகள் சரி செய்யப்பட்டும், 50 இடங்களில் இருந்த குறைவான மின் பாதைகள் புனரமைக்கப்பட்டும், 37 இடங்களில் கம்பங்கள் மின்கம்பங்கள் நிமிர்த்த பட்டும், 105 இடங்களில் மின்கம்பம் திறன் பணிகள் மேற்கொள்ளப்படும், பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டும் உள்ளது.

இவ்வாறு பணிகள் மிக விரைவாக நடைபெறுவதால் வருங்காலங்களில் மின்தடை ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.