திருச்சி அருகே கிணற்றில் மிதந்த ஆண் சடலம்! உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

0
1

திருச்சி அருகே கிணற்றில் மிதந்த ஆண் சடலம்! உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி ஏர்போர்ட் வள்ளுவன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(49). நேற்று (22/06/2021) மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் விமான நிலைய பகுதியில் விவசாய கிணற்றில் ராஜேந்திரன் சடலமாக மிதந்துள்ளார்.

2

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? அல்லது போதையில் தவறி விழுந்தாரா என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.