நாம் எல்லோரும் நகர (நரக) வாசிகள்

0
1

திருச்சியை தூய்மையான நகராக்கும் முயற்சியில் மாநகராட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஒருவிதத்தில் நோய்பரவும் வாய்ப்பை குறைக்க இதுவும் ஒரு நடவடிக்கையாகும்.

மகளிர் சுய உதவிக்குழு அமைப்பு எங்கும் செயல்பட்டு வரும் நிலையில் இந்த பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் என்ன?

4

ஒவ்வொரு தெருக்கள் தோறும் மகளிர் சுய உதவிக்குழு அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதனை பெண்கள் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் முதல், சிறு வணிக கடன் வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பின்தங்கிய பகுதிகளில் நல்ல முறையில் கழிவறை மேம்பாட்டு பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் தங்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் வீட்டின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுடன், மற்றவர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர். அப்படி இருக்கையில் அந்த தெருவில் கொட்டப்படும் குப்பைகளை அவரவர் வீடுகளில் வைத்திருக்க செய்து, மாநகராட்சி ஊழியர்களுக்கு இதனை அறிவித்து அவர்களை வந்து சேகரித்துக்கொள்ள செய்யலாம்.

2

இல்லையெனில் அந்த தெருக்களுக்கென்று தனியாக மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் ஒரு தனி நபரை நியமனம் செய்து குப்பைகளை கொட்டாமல் கண்காணிக்க செய்யலாம். இதன் மூலம் இரவு நேரங்களில் வெளியில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை (பொதுவாக ஓட்டல்கள் அருகில் இருக்கும் காலி இடங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர்). கண்காணித்து மாநகராட்சியிடம் புகார் அளிக்கலாம்.

தேம்ஸ் நதியும் குப்பை கூளங்களால் நிறைந்திருந்த காலத்தில் அந்த ஊர் நிர்வாகியே களத்தில் இறங்கி வேலை பார்த்தாராம். அதனால் இப்போது தேம்ஸ் நதியின் மூலம் பலகோடி ரூபாய் வருமானம் வருவதுடன் அந்த ஊருக்கே அழகுக்கு அழகு சேர்க்கிறது.

தனிமனித ஒழுக்கமும் முக்கியம். தெருவிற்கு ஒரு கழிப்பறை இருந்தும் நம் ஆண்மகன்கள், மற்றும் குடிமகன்கள் சிறுநீரை சாலை ஓரங்களிலேயே கழிக்கின்றனர்.

கொரோனாவை மையப்படுத்தியாவது இவர்களை திருத்தவேண்டும் அல்லது அவர்கள் திருந்த வேண்டும். இதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கிராமங்களில் கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அவ்வளவு சுத்தமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு அந்த ஊரின் சுத்தம் மிக முக்கியம். இங்கு அந்த உணர்வு இங்கு இல்லை. ஏனெனில் நாம் எல்லோரும் நகர வாசிகள் (நரக வாசிகள்).

– மீனா அசோக்

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்