முசிறி காவலர்களுக்கு கண் கலங்கி நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி

0
1

முசிறி காவலர்களுக்கு கண் கலங்கி நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி

கொரோனாவால் கல்லூரி இயங்காததால் மாணவிக்கு ஆன்லைன் வகுப்புகள் தான் அறிவூட்டின. கூலித் தொழிலாளியான தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி மாத தவணையில் ஆண்ட்ராய்டு போன் வாங்கினாள் மாணவி….

முசிறி கடைவீதி தெருவிற்க்கு வந்தபோது தற்செயலாக மாணவியின் போன் காணமல் போனது “ஐயோ” தனது எதிர்காலம் இருட்டாகி விட்டதாக நினைத்து தேம்பி அழுதபடி நின்றாள்….

2

அப்போது அவ்வழியில் ரோந்து பணியில் இருந்த முசிறி காவலர் உதயகுமார் மாணவியிடம் விசாரித்தார் மாணவியோ தனது கவலையை சொன்னார்

உடனடியாக காவலர் உதயகுமார் கருணையே வடிவான கருணாகரன் இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச் சென்றார்….

மாணவியின் கவலையை புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் உதவி ஆய்வாளர் மோகனை பார்க்க முன்மொழிந்தார்….

காரணம் உதவி ஆய்வாளர் மோகன் பொதுமக்களின் மனுக்களின் மீது முரட்டுத்தனம் காட்டுவார் மோகனின் முரட்டுத்தனம் முடிவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயனைத் தரும் என்கின்றனர் முசிறி மக்கள்….

(மாணவிக்கு முதலில் நம்பிக்கை இல்லை எவ்வளவோ வழக்குகள் மத்தியில் நமது செல்போன் குறித்து நடவடிக்கை எடுத்து மீட்பார்கள் என்று)

ஆனால் இணைந்தது ஒரு தனிப்படை காவலர் கூட்டணி அதில் ஆய்வாளர் அடுத்து தேர்வு செய்தது உதவி ஆய்வாளர் பிரகாஷ் முசிறி பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் பிரகாசமானவர் பிரகாஷ் குற்றவாளிகளை பிடிப்பதில் அந்தி சூரியன் போல் மறைந்து நின்று தட்டுவார்…..

அடுத்து உதவி ஆய்வாளர் ரவி இவர் அன்பால் அனைவரையும் கட்டிப்போடுபவர். காக்கிச் சட்டைக்குள் நம் இதயம் இருக்கிறது என்பதை உண்மை ஆக்கியவர்….

அடுத்த காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஏழை மக்களின் உணர்வுகளை புரிந்தவர் தன்னைத் தேடி வருபவர்களின் புகாரை மட்டும் அல்ல வந்தவர்கள் பசியைப் போக்க கூட மாத சம்பளத்தில் கால் பகுதியை ஒதுக்குபவர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை கொண்ட இவர் புகாரின் மீது பஞ்சாயத்து பண்ணாமல் குற்றவாளிகளை குதறி எடுப்பதில் சூப்பர்ஸ்டார் என்கின்றனர்….

இவர்களை கொண்டு தனிப்படை அமைத்தார் கருணையின் கடவுள் இன்ஸ்பெக்டர் கருணாகரன் அவர்களின் தனிப்படை கச்சிதமாக வலையை விரித்தது முசிறி பகுதி சுற்றிலும்….

அந்த வலையில் முசிறி பகுதியில் அயிரை விரால் மீன்கள் மட்டுமல்ல சில திமிங்கலங்களும் மாட்டின கள்ளச்சாராயம் ஒழிப்பு, வெளிமாநில மது பாட்டில்கள், மணல் கடத்தல் என ஏராளமாக சிக்கியது அதில் மாணவியின் தொலைபேசியும் சேர்த்து 11 போன்கள் சிக்கியது இந்த தனிப்படை
போலீஸார் வசம்……

திருச்சி மாவட்டத்தில் தாலுக்கா அளவில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் முந்தி நிற்பது முசிறி தாலுக்கா போலீஸ் தான் இதற்கு “முசிறி காவல்” “கோவிலின்” “மூலவர்” போல் தலைமை வகித்து ஒருங்கிணைக்கும் முசிறி துணை கண்காணிப்பாளர் பிரம்மானந்தத்தை மாவட்ட காவல்துறை கண்டிப்பாக கௌரவிக்க வேண்டும் என்பதே முசிறி பொதுமக்களின் கருத்து……

3

Leave A Reply

Your email address will not be published.