சசிகலாவை ஏற்க மாட்டோம்; செல்போனில் பேசினால் நீக்கம் ; திருச்சி மாநகர அதிமுக தீர்மானம்!

0
1

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார்.

Helios
2

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒதுங்கியிருந்த சசிகலா தற்போது கட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் தொலைபேசி வழியாக கட்சித் தொண்டர்களிடையே பேசி வருகிறார், இது கண்டனத்திற்குரியது.

சசிகலாவையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.